பொள்ளாச்சி வழியே திண்டுக்கல் இரயில்..!!

 

-MMH

             கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கமாக கோவை - திண்டுக்கல் இடையே பயணியர் ரயில் இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா முதல் அலைக்கு முன், பொள்ளாச்சி வழித்தடத்தில், பொள்ளாச்சி - கோவை, மதுரை - பொள்ளாச்சி - கோவை என இரண்டு பயணியர் ரயில்கள் இயங்கின.

கொரோனா ஊரடங்கின்போது, அந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்பின், பொள்ளாச்சி வழித்தடத்தில் ஒரு ரயில் கூட இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கத்தை துவங்க வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தெற்கு ரயில்வே ஆறு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அதில், கோவை - பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே பயணியர் ரயில் இயக்கம் துவங்கப்படும் என அறிவித்துள்ளது. ரயில் இயக்கம் துவங்கும் தேதி, நேரம் தெரிவிக்கவில்லை. வரும் அக்.,1ல், தெற்கு ரயில்வேயின் புதிய நேர அட்டவணை வெளியிடப்பட உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்.

Comments