கோவை, சேரன்மாநகர் - முதல்வர் ஆணை..!! முடுக்கி விடப்பட்ட சுகாதாரப்பணி..!!

 

-MMH

      கோவை மாவட்டம் சேரன்மாநகர் பகுதியில் கோவை மாநகராட்சி சார்பில் மாஸ் கிளீனிங் நடைபெற்றது. சேரன் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில்  சுகாதார பணிகள் நடைபெற்று வந்தாலும் முழுமையடையாமல் சற்று பின்னடைவு இருந்ததாகவே மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். 

இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் இதைப் பற்றிய விவரங்களுடன்  முதல்வரின்  தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அனுப்பியதாக தெரிகிறது. மனுவைப் பரிசீலித்த முதல்வரின் தனிப் பிரிவு அதிகாரிகள் முதல்வரின் சார்பில்  உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி  கோவை மாநகராட்சி  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இச்செய்தியை அறிந்த கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு பையா கவுண்டர் அவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சேரன்மாநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேவையான சுகாதார பணிகளை உடனடியாக  நடைபெறவேண்டும் என்று  அறிவுறுத்தினார். 


            இதன்பேரில்  காளப்பட்டி பகுதி பொறுப்பாளர் திரு பொன்னுசாமி அவர்களின் ஆலோசனைப்படி நேற்று காலை சுகாதார அதிகாரிகளின் முன்னிலையில் சுகாதாரப் பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் மாஸ் கிளீனிங் சுகாதார பணியில் ஈடுபட்டனர், இப்பணியில் குப்பைகள் அகற்றுதல், சாலை சுத்தம் செய்தல், சாக்கடைகள் சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக

 -முஹம்மது சாதிக் அலி.

Comments