மகேந்திராவின் புதியவகை பொக்லைன் அறிமுகம் !!

-MMH

    கோவையில் மகேந்திராவின் பொக்லேன் லோடர் மற்றும் கிரேடர்  பிஎஸ் -4 வகை வாகனம் சாரு சிண்டிகேட்-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாரு சிண்டிகேட் தலைவர் சாமியப்பன், நிர்வாக இயக்குனர் ருக்மணி சாமியப்பன், தலைமை நிர்வாக அதிகாரி சக்தி பாலாஜி மற்றும் பாரதி சக்தி பாலாஜி, சாரு  சிண்டிகேட்-ன்  நிர்வாக அதிகாரி  பாலசுப்பிரமணியம், மகேந்திரா தேசியத் தலைவர் வெங்கட ஜக்கினப்பள்ளி, விற்பனை மண்டலத் தலைவர் அனில் பணிக்கட், வாடிக்கையாளர் பராமரிப்பு மேலாளர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு புதிய வகை வாகனங்களை அறிமுகம் செய்தனர்.

தொடர்ந்து ஜெ.ஆர் டி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சாரு சிண்டிகேட் மற்றும் மகேந்திரா பெண் சாதனையாளர்களான தமிழகத்தின் முதல் பெண் பொக்லேன் ஓட்டுனர் அங்காள பரமேஸ்வரி மற்றும் பிரியா பிரபு, ரம்யா, லதா ஆகியோர்களை பாராட்டி கௌரவித்தனர். இந்நிகழ்வில் கோவை மற்றும் மேற்கு மண்டலங்களில் இருந்து வினியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். சாருசிண்டிகேட் மற்றும் மகேந்திரா பெண் சாதனையாளர்களான தமிழகத்தின் முதல் பெண் பொக்லேன் ஓட்டுனர் அங்காள பரமேஸ்வரி மற்றும் பிரியா பிரபு, ரம்யா, லதா ஆகியோர்களை பாராட்டி கௌரவித்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments