சிங்கம்புணரி அருகே இருசக்கர வாகனம் - அரசுப் பேருந்து மோதல்! சகோதரர்கள் படுகாயம்!!

  -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், சடையம்பட்டியை சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மகன்கள் பொன்னையா (வயது 23) நந்தகுமார்(22). இவர்கள் இருவரும் கிழவயல் கிராமத்தில் இன்று காலை நடைபெற்ற கோவில்  குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வதற்காக தங்களது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அதே நேரத்தில், துவரங்குறிச்சியில் இருந்து பொன்னமராவதியை நோக்கி ஒரு அரசுப் பேருந்து சென்றுள்ளது. பேருந்தை, துவரங்குறிச்சி பணிமனையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஓட்டியுள்ளார். பேருந்து, கரிசல்பட்டி அம்மன் கோவில் அருகே வளைவான பகுதியில் சென்றபோது அரசு பேருந்தின் முன்பகுதியில் எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில், பொன்னையா - நந்தகுமார் சகோதரர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டு, அதில் ஒருவருக்கு தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தரப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் இருவரையும் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக தற்போது அங்கிருந்து மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து புழுதிபட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

- அப்துல்சலாம் & ராயல் ஹமீது.

Comments