அம்பராம்பாளையம் ஆற்றில் பெண் சடலம்!! ஆனைமலை காவல் துறையினர் தீவிர விசாரணை!!

   -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மீன் கரை சாலையில் உள்ள அம்பராம்பாளையம் ஆற்றுப்பாலம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக ஆனைமலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில்  விரைந்து சென்ற SI செல்வராஜ், ஜெகதீஷ் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த பகுதியைச் சார்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் ஆனைமலை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments