திடீர் பிரேக்! வேனில் கட்டியிருந்த இரும்பு கம்பிகள் காருக்குள் புகுந்த கொடூரம் !!

 

-MMH

      கோவை உக்கடத்தில் இருந்து ஆற்று பாலம் வழியாக சுந்தராபுரம்  நோக்கி பாட்டு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் வினோத் ராஜ் (45)என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்தார் அந்த காரில் அவருடைய மனைவி லீமா(39),மகன் பெனடிக் பிராயன்(10),மகள் ஆனாரெக்ஸின்(8),ஆகியோர் இருந்தனர். அந்தக் கார் கரும்புக்கடை அருகே சென்று கொண்டிருந்தது அப்போது பின்னால் இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்தது அந்த வேன் டிரைவர் திடீரென்று வேகமாக பிரேக் போட்டார் இதனால் வேனில் கட்டப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இரும்பு  கம்பிகள் முன்னோக்கி பாய்ந்தன. இதனால் அந்த இரும்பு கம்பிகள் நேராக முன்னால் சென்று கொண்டிருந்த காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது.

இதனால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள். இரும்புக் கம்பிகள் காருக்குள் புகுந்ததில் வினோத் ராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது ஆனால் காருக்குள் இருந்த நீமா மற்றும் இரண்டு குழந்தைகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் வேனில் இருந்த கம்பிகள் காருக்குள் பாய்ந்ததை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.  அவர்கள் விபத்தை ஏற்படுத்திய சிங்காநல்லூர்ரை சேர்ந்த ஜெயச்சந்திரன்(42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-S.ராஜேந்திரன்.

Comments