ஆம்பூர் அருகே நண்பர்களுடன் ஆற்றுநீரில் குளிக்கச் சென்ற இளைஞன் மாயம்!!

 -MMH 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம்  ஈடிகர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ராகேஷ் (வயது 24) என்பவர் நேற்று பிற்பகல் தனது நண்பர்கள் 8 பேருடன் தேவலாபுரம் பகுதியில் ஆற்றில் குளித்தனர். அப்பொழுது இளைஞர் ஒருவர் மாயமானார். இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்  மாயமான இளைஞரை தொடர்ந்து பத்து மணி நேரமாக போராடி தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். 

மேலும் ஆம்பூர் நகர காவல்துறையினர் இதுகுறித்து  விசாரணை செய்து வருகின்றனர்.

 P. ரமேஷ், வேலூர்.

Comments