டெல்லியில் பாதுகாப்பு படையில் பணி புரியும் பெண்ணை ஒரு கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொடூர கொலை !!

 

-MMH 

      டெல்லியில் 21 வயதே நிரம்பிய பாதுகாப்பு படை பிரிவு காவலர் (பிந்து) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிக கொடூரமாக 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி சங்கம் விஹார் பகுதியை சேர்ந்த  (பிந்து) பெண் கடந்த மாதங்களுக்கு முன்புதான் பாதுகாப்பு படை பிரிவில் காவலராக பணியில் சேர்ந்துள்ளார்.

27.08.2021 அன்று மாலை (பிந்து) பணி முடித்துவிட்டு வீடு திரும்பாததால், பெற்றோர்கள் (பிந்து)வை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்திலும், கலெக்டர் அலுவலகத்திற்கும் சென்று உதவி கேட்டுள்ளனர். யாருமே உதவி செய்யாது காரணத்தினால் பெற்றோர்களே (பிந்து)வை தேடி அனைத்து இடங்களிலும் அளைந்துள்ளானர். 

இந்நிலையில் மார்பகங்கள் சிதைக்கப்பட்டு, சுமார் 50 இடங்களுக்கு மேல் வெட்டு காயங்களுடன் மிக கொடூரமான முறையில் (பிந்து) 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் கிடைத்துள்ளது. டெல்லி பாதுகாப்பு படை பிரிவைச் சேர்ந்த பெண் காவலருக்கே பாதுகாப்பில்லை எனில், சாமானிய பெண்களின் நிலை என்ன?

(பிந்து) மரணத்திற்கு நீதி வேண்டும், இந்த கொடூர செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்து பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். 

இந்த கொடூர செயல்களில் ஈடுபட்டவர்களை இந்திய அரசு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்.. என்பது பெண்கள் பாதுகாப்பு அமைப்பினர் சமூகநல அமைப்புகளும் வேண்டுகோளாக எழுப்பி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ரைட்  ரபீக்.

Comments