கோவை வந்த செந்நாய்..!! விரட்டும் பணியில் வனத்துறை..!!

  -MMH

    கோவை உக்கடம் பெரியகுளம் பகுதிக்கு வந்த செந்நாயை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவை நகரின் மையப்பகுதியான உக்கடம் பெரியகுளத்தில் நேற்று முன்தினம் கஜமோகன் ராஜ் என்ற பறவைகள் ஆர்வலர் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது செந்நாய் ஒன்று அங்கிருப்பது தெரிந்தது.

இதையடுத்து செந்நாயை படம் பிடித்த அவர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் செந்நாய் நடமாட்டத்தை கண்காணித்தனர். வனத்துறையினர் கூறுகையில்,"செந்நாய்கள் அடர்வனப்பகுதியில் வசிப்பவை. ஒரு செந்நாய் மட்டும் உக்கடம் பெரியகுளத்திற்கு வந்துள்ளது. செந்நாயை வனத்துக்குள் திரும்ப அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வனப்பகுதியிலிருந்து 12 கி.மீ. தள்ளி இருப்பதால், செந்நாயை வனத்துக்குள் திருப்பி அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது." என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

I.அனஸ்.

V. ஹரிகிருஷ்ணன்.

Comments