கடலூரில் மழைக்கால கால்நடை பராமரிப்பு கருத்தரங்கம் நடைபெற்றது !!

 

-MMH

     கால்நடை மருத்துவர் கோபிநாத்.

        கடலூரில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் மழைக் காலத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்த தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

ரிலையன்ஸ் அறக்கட்டளை மேலாளர் மெய்கண்டன்.

இதில் கால்நடை மருத்துவர் கோபிநாத்  கலந்துகொண்டு மழைக்காலத்தில் ஆடு, மாடு, கோழி மற்றும் கன்று உள்ளிட்ட கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள், தீவன மேலாண்மை, குடல்புழு நீக்கம் செய்வதன் முக்கியத்துவம், கன்றுகள் பராமரிப்பு, ஆடுகள் மற்றும் கோழிகள் எடை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், கடலூர் பகுதிக்கு ஏற்ற இனங்கள் பற்றியும் விளக்கம் அளித்தார்.

ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி.

இந்நிகழ்ச்சியில்,  60 க்கும் மேற்பட்ட கடலூர் மாவட்ட விவசாயிகள் தொலைபேசி வழியாக பங்கேற்று பயன் பெற்றனர்.

இதற்கான ஏற்பாட்டை ரிலையன்ஸ் அறக்கட்டளை மேலாளர் மெய்கண்டன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு 1800 4198 800 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பொதுமக்கள், விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என ரிலையன்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

-செய்தியாளர் மலர் மன்னன்.

Comments