கோவையில் இடியுடன் கூடிய திடீர் மழை. போக்குவரத்து பாதிப்பு. சாலைகளில் எங்கும் மழைநீர் வழிந்து ஓடியது !!

 

-MMH

     கோவையில் தொடர்ந்து ஒரு வார காலமாக அக்னி நட்சத்திரம் போல வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கத்தால் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் வயது முதிர்ந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் கைகளை குடை பிடித்தபடி சென்றனர்.  தொடர்ந்து வானிலை மையமும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என தொடர்ந்து அறிவித்து வந்தனர். ஆனால் அனைத்தும் பொய்யாய் போய்க்கொண்டிருந்தது. 

இந்த நிலையில் இன்று ஒரு மணி அளவில் திடீரென கோவை பகுதியில்  கருமேகம் சூழ்ந்தது, வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது. திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து 2 மணியிலிருந்து தொடர்ந்து கோவை பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கோவை காந்திபுரம், உக்கடம், கலெக்டர் அலுவலகம், கணபதி,சரவணம்பட்டி, ரத்தினபுரி, மணியகாரம்பாளையம், அவிநாசி ரோடு, சித்ரா ஏர்போர்ட், சிங்காநல்லூர், காந்திபுரம் பேருந்து நிலையம், ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 

மழை பெய்யும் என அறியாத பொது மக்கள் சாலைகளில் வழக்கம்போல சென்று கொண்டிருந்தன. திடீர் இடியுடன் கூடிய மழையால் அனைவரும் ஆங்காங்கே ஒதுங்கி நிற்க தொடங்கினர். மழை நீர்  பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருந்தாலும் அடித்த வெயிலுக்கு பெய்த மழையால் மக்கள் மனம் குளிர்ந்து உள்ளது என்றே கூற வேண்டும்.


- சீனி,போத்தனூர்.

Comments