நொய்யல் ஆற்றில் மருத்துவ கழிவுகள். நோய் பரவும் அபாயம் கண்டுகொள்ளுமா மாநகராட்சி..!!

   -MMH

    கோவை புட்டுவிக்கி பாலம் அருகே நொய்யல் ஆற்றில் ஏராளமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. இதில் காலி ஊசிகள், பயன்படுத்தப்பட்ட மருந்து குப்பிகள், மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட பஞ்சுகள் உள்ளிட்டவை காணப்பட்டன. இதனை இந்த பகுதியில் இரவோடு இரவாக மர்மநபர்கள் கொட்டி விட்டு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது

இது குறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறும்போது.

"நொய்யல் ஆற்றின் கரையோரம் இதுபோன்ற மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த பகுதியில் ஆடுகள், மாடுகள், உள்ளிட்ட கால்நடைகள் அதிகமாக  மேய்ச்சலுக்கு வரும்,  அப்போது கால்நடைகளின் கால்களில் இந்த ஊசிகள் குத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.மேலும் அந்த வழியாக செல்லும் பொது மக்களுக்கும் இந்த மருத்துவ கழிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும் மழை காலங்களின் போது மருத்துவ கழிவுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் இதன் மூலம்  பொதுமக்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு உக்கடம் பெரியகுளம் பகுதியில் இது போன்று மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன .இது போன்று பொது இடங்களில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து  கொட்டும் மர்ம நபர்கள் மீது  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments