சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்! போக்குவரத்து பாதிப்பு!

-MMH

       சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய பாலம் தேவர்சோலை பகுதியில், கடந்த ஆறு மாத காலங்களாக குடிநீர் பிரச்னை இருந்து வந்துள்ளது. அது சம்பந்தமாக காளாப்பூர் ஊராட்சி மன்றத்தில் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் அந்தப் பகுதியில் தொடர்ந்து குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று காலை 11 மணி அளவில் பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர்.  தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் குறைகளைக் கேட்டு, அவற்றை சரி செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. குடிநீர் கோரி நடந்த இந்தச் சாலை மறியலால், காரைக்குடி - பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments