கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் இரத்ததான முகாம் நடைபெறுகிறது இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் !

 

-MMH

மேலும் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது:

செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக உறுதிமொழியை திமுக தலைவர் அறிவித்தார்  இதனால் வேலைவாய்ப்பு பெண்கள் முன்னுரிமை  தரப்படுகிறது மேலும் தற்போது பெண்கள் வேலைவாய்ப்பில் 40% உள்ளது வரும் நாட்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்த அவர் ஆதிதிராவிட கட்டடங்கள் நாங்கள் ஆய்வு செய்தோம் பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சுற்றுச்சுவர் இல்லாமலும் இருக்கிறது இதனால் அதற்கு 25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது மேலும் ஸ்மார்ட் ஸ்கூல் 112 ஸ்மார்ட் கிளாஸ் மேம்படுத்த உள்ளோம் குறிப்பாக திராவிட மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் பொருத்தவரை அவரவர்கள் வங்கிக் கணக்கு தான் செலுத்தப்படுகிறது  கிடைக்காத பட்சத்தில் என்றால் உடனடியாக தகவல் தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார் மேலும் இன்று தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது மத்திய அரசு தடுப்பூசிகளை அதிகமாக தர வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்,தந்தை பெரியார் திராவிட கழகம் பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன், 54 வது வார்டு செயலாளர் ராம்நகர் ராமதாதன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments