கொரோனா அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் !!

 

-MMH

     தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து விட்ட நிலையில், ஐந்து மாத இடைவெளிக்கு பின் ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் துவங்கி உள்ளன. கல்லுாரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே, கடலுாரில் பணிக்கு வந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில், 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில் புதிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments