இப்படியும் ஒரு நட்பா.!! தன் நண்பனின் நிலையை எண்ணி உயிர் விட்ட உண்மை நண்பன்...!!

 

-MMH

      கோவை மாவட்டம் வால்பாறை தலைநாள் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 19). சூர்யாவின்  நண்பர் கிருஷ்ணகுமார் (வயது 19 ) கிருஷ்ணகுமார் தன் சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில்  கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனத்தால் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார். இதனால்  பலத்த காயமுற்று கிருஷ்ணகுமார்  உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையறிந்த சூர்யா மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். தன் நண்பனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று துக்கத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது. மீளா துயரத்தில் இருந்த சூர்யா தன் நண்பன் கிருஷ்ணகுமார்  நிலையை பொறுத்துக் கொள்ளமுடியாமல் தூக்கிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் . நண்பனின் நிலைமைக்காக சூர்யாவின் இந்த செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. 'இப்படியும் ஒரு நட்பா' இன்று மக்கள் புலம்புவது நம் கண்களிலும் கண்ணீர் கசிய வைக்கிறது..

நாளைய வரலாறு செய்திக்காக

-திவ்ய குமார், வால்பாறை.

Comments