நாசம்... நஷ்டம்..!! விவசாயிகளின் அவல நிலை.. அரசே எங்களை கண்டு கொள்..!!!!

  -MMH
   அன்னூர் அல்லாம்பாளையம் பகுதியில் பலத்த  சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 8000 வாழைமரங்கள் நாசமாகின.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று அன்னூர் பகுதிக்குட்பட்ட அல்லாம் பாளையம் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் அப்பகுதியில் பயிரிடப்பட்ட 8000  வாழை மரங்கள் அடியோடு நாசமாயின.  அரசுக்கு விவசாயிகள் தங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை இதன் விவசாயிகளின் எதிரொலியாக அப்பகுதியின் விஏஓ நாகராஜ் அவர்கள் சேதம் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார், மேலும் அவர் கூறுகையில் இதைப் பற்றி அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு இழப்பீடு சம்பந்தமாக பரிந்துரை செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.

 விவசாயி ஒருவர்  கூறுகையில், "வாழை பயிரிட்டு, உரமிட்டு அதை சிரமப்பட்டு பாதுகாத்து எல்லாம் கைகூடி  விளைச்சலின் பயனை அனுபவிக்கும் நேரத்தில் இயற்கை எங்களை வஞ்சித்து விட்டது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது ஆகவே அரசு எங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்" என்று அவர் வருத்தத்துடன் கோரிக்கை வைத்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி, அன்னூர் பகுதி.

Comments