கதை கேளு கதை கேளு.. உலக சாதனை படைத்த டீச்சர் அம்மாவின் கதை கேளு!!

      -MMH

கோவை சரவணம்பட்டியில் உள்ள டாப்ஸ் பப்ளிக் பள்ளி முதல்வர் ஐந்து மணி நேரத்தில் 74 கதைகள் சொல்லி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். டாப்ஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வராக பணியாற்றி வருகிறார் ஜெயந்தி. இவர் சிறுகதைகள் கூறி  உலக சாதனை படைத்துள்ளார். ஐந்து மணி நேரத்தில் 60 சிறுகதைகள் சொன்னாலே போதும் என்ற நிலையில் இவர் 74 சிறுகதைகள் சொல்லி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.  டாப்ஸ் பப்ளிக் பள்ளியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் டாப்ஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன், அப்பள்ளியின் ஆலோசகர், சௌந்தரராஜன் (PSG கல்லுரியின் பேராசிரியர்), அப்பள்ளியின் செயலாளர் அனிதா கார்த்திகேயன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.

காலை 9 மணிக்கு கதை கூற ஆரம்பித்த ஜெயந்தி மதியம் 2.36 வரை தொடர்ந்து ஐந்து மணி நேரத்தில் 74 கதைகளை கூறி உலக சாதனையை படைத்தார். இதை நேரலையாக எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் மேலாளர் டாக்டர். சத்திய ஸ்ரீ குப்தா, ஏசியன் ரெக்கார்ட் அகாடமி மேலாளர் சிவக்குமார், இந்தியன் ரெக்கார்டு அகடமி மேலாளர் ஜெகநாதன் மற்றும் தமிழன் புக் ரெக்கார்ட்ஸ் மேலாளர் டாக்டர் ராஜ கிருஷ்ணா ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிகழ்வினை நேரில் காணும் சான்றாளராக முனைவர் பழனிசாமி (கோவை மாவட்ட அறிவியல் அலுவலர்) நேரக்காப்பாளராக சரண்யா மற்றும் கோமதி ஆகியோர் இருந்தனர். மேலும் மாலை 3 மணியளவில் ஜெயந்தி உலகசாதனை படைத்தனை உறுதிசெய்து அவருக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெதப்பம்பட்டி RGM மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் லஷ்சுமி, கோவை கோகுலம் ஹோட்டல் மேலாளர் நீனா கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

-முஹம்மது சாதிக் அலி.

Comments