முடீஸ் பகுதியில் முகாமிட்டுள்ள புலியால் பொதுமக்கள் பீதி!!

         -MMH

கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் முடீஸ் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு அங்காடி அருகில் ஆட்டுக்கறி கடை பக்கத்தில் புலி ஒன்று பதுங்கி இருப்பதை அங்குள்ள மக்கள் பார்த்து கூச்சலிட்டார்கள். அப்பொழுது அந்தப் புலி மெதுவாக எழுந்து நடந்து சென்றது. இதை அறிந்த வனத்துறையினர் அந்த புலி எங்கு சென்று இருக்கும் என அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்தப் புலி வயது மூப்பினாலோ அல்லது உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலோ சோர்வாக சுற்றிக்கொண்டு இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இரவு 7 மணிக்கு மேல் பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், வெளியில் நடமாட வேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதையறிந்து வனத்துறைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-செந்தில்குமார், வால்பாறை முடீஸ்.

Comments