பொள்ளாச்சி இந்து முன்னணி அமைப்பின் சார்பாக ஆனைமலை மேற்கு ஒன்றியத்தில் உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா!!

 -MMH

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று  கட்டுப்பாடுகளோடு விநாயகர் சதுர்த்தி விழா இன்று நடைபெற்று வருகிறது. அதேசமயம்  தமிழகம் 

உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா நோய்தொற்று  பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் பொது இடங்களில் சிலை வைக்கவும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை இந்து முன்னணி அமைப்பின் சார்பாக ஆனைமலை மேற்கு ஒன்றியத்தில் இரண்டு சிலைகள் மட்டும் வைக்கப்பட்டுள்ளது.

ஒன்று அம்பராம்பாளையம் அடுத்த ஓரக்காளியூர் மற்றொன்று தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் எம்ஜிஆர் நகரப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் நகரப்பகுதியில் ஆனைமலை மேற்கு ஒன்றியம் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதூர்த்தி விழா கொரோனா ஊரடங்கு வழிமுறைகளை கடைபிடித்து வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது அதேசமயம் ஆனைமலை காவல்துறை சார்பாக ஒரு காவல்துறை அதிகாரி பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொலக்கட்டை, பொரிகடலை  உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

-M.சுரேஷ்குமார், பொள்ளாச்சி.

Comments