திருப்பத்தூரில் இருவேறு சாலை விபத்துகளில் இருவர் சாவு! தலைக்கவசம் அணியாததால் விபரீதம்!

   -MMH

   திருப்பத்தூர் அருகே தென்கரையை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் முருகவேல் (45) மற்றும் சுப்பன் (56) இருவரும் இருசக்கர வாகனத்தில் தென்கரை ஊருக்குளிருந்து வந்து முக்கிய சாலையை கடக்கும்போது சிராவயல் புதூரில் இருந்து தம்பிபட்டியை நோக்கி பாண்டி (52) என்பவர் ஓட்டி வந்த காரில் எதிர்பாராதவிதமாக மோதியதில் கார் சக்கரத்தில் சிக்கி முருகவேல் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சுப்பன் என்பவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். 

இதேபோன்று, திருப்பத்தூர் அருகே சிவகங்கை சாலையில் கல்வெட்டிமேடு என்ற இடத்தில் நடந்த மற்றொரு சாலை விபத்தில் திருவுடையார்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் தண்டாயுதபாணி (34) என்ற வாலிபர் உயிரிழந்தார். இவர் திருப்பத்தூர் - சிவகங்கை சாலையிலிருந்து தேவரம்பூர் விலக்கு சாலையில் திரும்பும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த திருப்பத்தூரை சேர்ந்த மணி என்பவரின் மகன் முத்துப்பாண்டியின் மீது மோதி, இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதில் தண்டாயுதபாணி சிகிச்சை பலனின்றி திருப்பத்தூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு வாலிபர் முத்துப்பாண்டி திருப்பத்தூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தேவரம்பூர் விலக்கு சாலையில் நடந்த விபத்து குறித்து திருப்பத்தூர் காவல் சார்பு ஆய்வாளர் சேவுகவீரையா வழக்குப்பதிவு செய்தார்.

காவல் ஆய்வாளர் சேது விசாரணை செய்து வருகிறார். தென்கரை விபத்து குறித்து நாச்சியாபுரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments

Unknown said…
தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட ஏற்பட்ட விபரீத முடிவு

சாலையை கடக்கும் முன் இருபுறமும் கவனித்து சென்றால் இது போன்ற ஆபத்துகள் நிகழாவண்ணம் உயிரை பாதுகாக்கலாம்