அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து வரும் அதிமுகவினர்! திமுகவினர் உற்சாகம் பொங்க வரவேற்பு!!

    -MMH

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை ஒன்றியத்துக்குட்பட்ட 
திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வருகின்ற 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கட்சியில் இருந்து விலகி அக்கட்சியினர்  திமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுகவைச் சேர்ந்த மீனாட்சிபுரம் கிளை இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சுரேஷ், முன்னாள் அதிமுக அவைத் தலைவர் மணி அவரின் மகன் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சந்தோஷ் மற்றும்  செல்வராஜ்,

தால் 

சேனாதிபதி, நாகராஜ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி செயலாளர் வெங்கடேஷ் மற்றும் மாட்டு வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சின்னகன்னு என்கிற செல்வராஜ்,
அங்குராஜ் ஆகியோர் கோவை தெற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் ஏற்பாட்டில் ஆனைமலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கன்னிமுத்து முன்னிலையில் திமுகவில் தங்களை இன்று  இணைத்துக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி 36வது வட்டசெயலாளர் கரியாம்பட்டி செல்வராஜ், மீனாட்சிபுரம் கிளைச் செயலாளர் அப்புசாமி, எம்.ஜி.ஆர் நகர் ராதாகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் போடிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, ஜெய்சங்கர், வடுகை லிங்கதுரை, காபுலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மோகனாகோவிந்தராசு, தென்சித்தூர் ஜெகதாம்பிகை ஜீவா,


மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சபரிஷ்,மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ்,ஆறுமுகம்,தென்சித்தூர் 1வது வார்டு உறுப்பினர் மலர்கொடி சக்திவேல்,மீனாட்சிபுரம் கிளை இளைஞர் அணி தருண்,சபரி மற்றும் கழகத் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர். அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையும் கட்சியினரை திமுகவினர் உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

M.சுரேஷ்குமார்.

Comments