தனிமை மிகக் கொடுமை..!! நெஞ்சை பதற வைத்த முதியவரின் விபரீத முடிவு...!!!!
தனிமையால் விரக்தியடைந்த 80 வயது முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பம் கோவை பீளமேடு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை பீளமேடு அருகே உள்ள நேரு வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், வயது (80), 2 வருடங்களுக்கு முன் இவர் மனைவி இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை இந்நிலையில் தனியாக வாழ்ந்து வந்த பாலசுப்பிரமணியம் தனிமையால் மிகவும் விரக்தியடைந்து காணப்பட்டுள்ளார். மேலும் சில வருட காலமாக இவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. மருத்துவம் செய்தும் உடல் நிலை சரியாகவில்லை. இதனால் இவர் சில நாட்களாகவே மனம் உடைந்த நிலையிலும் வேதனையிலும் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பாலசுப்பிரமணியம் மனமுடைந்து தன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொண்டு தீ பற்ற வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் உடல் முழுவதும் மளமளவென பற்றி எரிந்தது ' தீ'. வலி பொறுக்க முடியாமல் அவர் அலறிய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்குள் அவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொள்வது சட்டத்துக்கு புறம்பானது, கோழைத்தனத்தின் உச்சநிலை. "துன்பம் இல்ல உயிரினம் இவ்வையகத்தில் இல்லை" ஆகவே நம் வாழ்க்கையில் வரும் தடைகளையும் துன்பங்களையும் போராடி தான் வென்று ஆக வேண்டும்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது சாதிக் அலி.
Comments