பில்லி சூனியம்..!! பீதியை கிளப்பிய ஜோதிடர்... அரண்டு போன பக்தர்..!!!

 

-MMH

    கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 7.50 லட்சம் மோசடி செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அன்னூர் அடுத்த  பொன்னே கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் வயது 29. இவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஐயப்பன் மேட்டூரை அடுத்துள்ள சக்திவேல் என்னும்  ஜோதிடரை பற்றி கேள்விப்பட்டு தன் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு அவரை அணுகி உள்ளார்.

ஜோதிடர் சக்திவேல் ஐயப்பனிடம் அவர் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைக்கு ஐயப்பனின் எதிரிகள் அவருக்கு  பில்லி சூனியம் வைத்ததே பிரச்சினைகளுக்கு  காரணம் என்று கூறியிருக்கிறார், மேலும் சூனியத்தை எடுக்க 7.50 செலவாகும் என்றும் கூறியுள்ளார்.  இதை நம்பிய ஐயப்பன் மற்றும் குடும்பத்தினர் சக்திவேல் மற்றும் அவருடைய நண்பர் சுரேஷ் சுரேஷிடம் 7.50 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். இருவரும் ஐயப்பனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பில்லிசூனியம் எடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதைப்பற்றி ஐயப்பன் சக்திவேல் இடம் கேட்க அவர் சரியான பதில் கூறவில்லை  இதனால் சக்திவேலின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஐயப்பன் அன்னூர் காவல் நிலையத்தில் இதைப்பற்றி புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இதை பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இன்பம்,துன்பம் இவ்விரண்டும்  மனிதனுடைய வாழ்க்கையில் இருந்து  பிரிக்க  முடியாதவை. எல்லா குடும்பத்திலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. பிரச்சனைகளை கடந்து வருவதற்கு நம் அறிவார்ந்த சிந்தனையை கொண்டு செயல்பட வேண்டுமே தவிர இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது எல்லோருடைய ஒட்டுமொத்த கருத்தாகும் உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி, அன்னூர் பகுதி.

Comments