தற்காலிக மீன் கடைகளால் சாலை போக்குவரத்து பாதிப்பு !

-MMH

  தஞ்சை வேளாங்கண்ணி தேசிய நெடுஞ்சாலையில் பட்டுக்கோட்டை பிரிவு சாலையில்  அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழே தற்காலிக மீன் சந்தை கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது இங்கு மொத்த மீன் விற்பனை மற்றும் சில்லறை மீன் விற்பனை கடைகள் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன .

இந்த கடைகள் அனைத்து நாட்களிலும் செயல்படுகின்றன இந்த கடைகள் பாலத்தின் கீழே அமைந்துள்ள இணைப்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் இணைப்பு சாலை  பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடியில் இருந்து சென்னை மற்றும் வேளாங்கண்ணி செல்லும்  பயணிகள் மற்றும் வாகனங்கள்  வேளாங்கண்ணி பைபாஸ் சாலையில் இணைவதற்கான இணைப்பு  பாதையாகும்.

இந்த இணைப்பு பாதையை ஆக்கிரமித்திருக்கும் கடைக்காரர்கள்  வாகனங்களை அவ்வழியே செல்ல விடாமல்  அதற்கு ஆட்சேபனை தெரிவித்து வாகனங்களை ஐந்து கிலோமீட்டர் சுற்றிவர செய்கின்றனர் .இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

மக்களுக்கும் மிகவும் இடையூறாக அமைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் அவ்வழியே அடிக்கடி செல்லும் வாகன ஓட்டிகள் மீன் சந்தைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments