அசாம் விவசாயிகளை சுட்டுக்கொன்ற அம்மாநில அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

   -MMH

அசாம் மாநிலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளை சுட்டுக்கொன்ற அம்மாநில அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கோவை உக்கடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசாம் மாநிலத்தில், அரசு நிலத்தில் குடியிருந்த கிராமமக்கள், 800 குடும்பத்தினரை அம்மாநில போலிசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 2 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் விவசாயிகளை சுட்டுக்கொன்ற அசாம் மாநில காவல் துறையினரை கண்டித்து பல்வேறு பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் அசாம் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் உத்தரவின் பேரிலே அசாம் பாஜக அரசு வேண்டுமென்றே சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்த இருப்பதாகவும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

- சீனி,போத்தனூர்.

Comments