புழுதிபட்டியில் வேளாண் சட்டங்கள், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு விவகாரங்களில் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

-MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், புழுதிபட்டியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரியும். கேஸ், பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்தும், நீட்தேர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட

விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து எஸ்.புதூர் ஒன்றியத்தில் புழுதிபட்டி, உலகம்பட்டி, ஆரணிபட்டி, கரிசல்பட்டி, குன்னத்தூர், பிரான்பட்டி ஆகிய பகுதிகளிலும் சிங்கம்புணரி மற்றும் தாலுகா முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.புதூர் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் வழிகாட்டுதலின்படி புழுதிபட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 

பாரிவள்ளல் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் CT.முருகேசன், மாணவரணி அமைப்பாளர் TR.செல்வக்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் A.பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி செயலாளர் அபுபக்கர் சித்திக், கிளைச் செயலாளர் இதிரிஸ்முகமது, முகமதுஅப்பாஸ், மகாதீர், ஜாஃபர்அலி, பொன்னையா மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments