பாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி,லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது !

 

-MMH

      பாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இந்த மருத்துவமுகாமை மாவட்ட பொதுசெயலாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார் மேலும் மாநில பொருளாளர் SR.சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்,

இதில் மாவட்ட இளைஞர் இணை பொதுசெயலாளர் கிருஷ்ணபிரசாத் தலைமை தாங்கினார் இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் கலந்துகொண்டு அவர்களுக்கு தலைவலி,கண்களில் பூளை கட்டுதல்,இமை இறங்கல்,மாறு கண்,கண்களில் சதை வளர்தல்,குழந்தைகள் கண்புரை, குளுக்கோமா, சர்க்கரை கண் நோய்,பார்வை இழப்பு,கண் புரை போன்ற அனைத்து விதமான கண் நோய்களுக்கும் இந்த முகாமில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் இளைஞர் அணி மண்டல தலைவர் மாணிக்கவேல்,மற்றும் மணிகண்டன், டில்லிகுமார்,பூபாலன் உள்ளிட்ட ஏராளமான னோர் கலந்துகொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments