தனிப்படை அமைத்து இறந்தவரின் சடலம் கிடைக்குமா.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!

    -MMH

  கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள சோலையார் டேமில் கோவையை சேர்ந்த மருத்துவ மாணவன் சுற்றுலாவிற்காக அப்பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்த பொழுது தண்ணீரில் மூழ்கினார் என்பதை தெரிய வந்து தேடும் பணியில் நான்கு நாட்களாக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள் கூட்டம் இன்றாவது இறந்தவரின் சடலம் கிடைக்குமா என ஆவலுடன் இருக்கிறார்கள். 

தண்ணீரை குறைத்தால் தேடும் பணி மிகவும் எளிதாக இருக்கும் என்று பொது மக்களின் எதிர்பார்ப்பு. தண்ணீரை வெளியேற்றி குறைக்க வேண்டும். இன்றுடன் 5வது நாளாக தேடும் பணி தீவிரம் ஆகியுள்ளது. இன்று தனிப்படை அமைத்து மாணவன் ஸ்ரீராமை தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்வதற்காக,

 -திவ்யா குமார், வால்பாறை.

Comments