வால்பாறையில் கனமழை எதிரொலி..!!!ஆறுகள் நிரம்பி ஓடிக்கொண்டிருப்பதால் கவனமாக இருக்கமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!!!!

  -MMH

   அழகுமிக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குவது வால்பாறை. தற்போது இங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. மழைக்காலம் என்பதால் சில்லென்ற காற்று, பசுமையான தோற்றம் ஒரே  வார்த்தையில் சொல்லப்போனால்  மிக ரம்மியமான  சூழல் அமைந்துள்ளது .

அதே நேரத்தில் அதிக மழை பெய்து கொண்டு இருப்பதினாலஎங்கு சாலையெங்கும் தண்ணீர் நிரம்பி ஈரப்பதம் ஆகவே காணப்படுகிறது. ஆகவே அங்கிருக்கும் பொதுமக்களும் சுற்றுலாவுக்கு வரும் சுற்றுலா பிரியர்களும் சாலையில் கவனமாக செல்ல வேண்டும்.

இதுமட்டுமன்றி வால்பாறையில் சுற்றியுள்ள ஆறுகளிலும் தண்ணீர் வழிந்து நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகவே  மாநகராட்சி நிர்வாகம் தண்டோரா மற்றும் ஒலி பெருக்கியின் மூலமாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் கூலாங்கல் ஆற்றுப் பகுதிகளில் குளிக்கக் கூடாது என்றும் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. கட்டுப்பாடுகள் விதித்தது மட்டுமல்லாமல் அதை மக்கள் பின்பற்றுகிறார்களா என்று கண்காணித்தும் வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார், வால்பாறை.

Comments