சிங்கம்புணரி அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த வாலிபர்! உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

 

-MMH

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டியில் வசித்து வருபவர் ரவிசந்திரன் மகன் வசந்த் (வயது 32). திருமணமாகாத வாலிபர். அவர் வளர்க்கும் சேவல் ஒன்று நேற்று மாலை 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்து விட்டது.சேவலைப் பிடிப்பதற்காக அவர் கிணற்றின் படி வழியாக இறங்கியுள்ளார். அப்போது கீழே உள்ள படி உடைந்து, 20 அடி ஆழத்தில் படியுடன் சேர்ந்து விழுந்ததில், இடுப்பில் அவருக்கு ஏற்பட்டிருந்த பலத்த காயத்துடன் அவர் கிணற்றின் உள்ளே கிடந்துள்ளார். அதனைக் கண்ட வாலிபரின் குடும்பத்தினர் அலறல் சத்தம் கேட்டு ஊர் மக்கள் திரண்டனர்.

உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பிரகாஷ் தலைமையிலான சிங்கம்புணரி தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்பாக கிணற்றில் இறங்கி வசந்தை அரை மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்டனர்.

Uploading: 220647 of 220647 bytes uploaded.

108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்களை ஊர்பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

-அப்துல்சலாம்.

Comments