காசு போனா போச்சுனு விற்ற முடியாதுங்க.. தலைக்கு மேல வேலை செஞ்சு சம்பாதிச்ச காசு!!

    -MMH

அன்னூர் குரும்பபாளையத்தில் சலூன் கடை சூப்பர்வைசரை இரும்பு கம்பியால் தாக்கி ரூபாய் 10 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்.. போலீஸ் விசாரணை.. அன்னூர் கோவில்பாளையம் பகுதியை அடுத்த  குரும்பபாளையம் என்னும் பகுதியில் அருள்தாஸ் (வயது 36) என்னும் நபர் சலூன் கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். இவர் வேலையை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு அன்று கடையை பூட்டிவிட்டு கலெக்சன் பணம் ரூபாய் 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டர் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் திடீரென்று வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கி ரூபாய் 10 ஆயிரத்தை  கொள்ளையடித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியுற்ற அருள்தாஸ் செய்வதறியாது பதறி உள்ளார். உடனே கோவில்பாளையம் காவல் நிலையத்துக்குச் சென்று இதைப் பற்றி புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி, அன்னூர்.

Comments