பாலியல் விவகாரத்தில் கைதான விமானப்படை அதிகாரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!!

      -MMH

பாலியல் விவகாரத்தில் கைதான விமானப்படை அதிகாரியை இன்று நீதிமன்றத்தில் மாநகர போலிசார் ஆஜர் படுத்துகின்றனர். கடந்த 10 ஆம் தேதி கோவை விமானப்படை பயிற்சி கல்லூரி விடுதி அறையில் பெண் விமான அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம். விமானப்படை சார்ந்த உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனக்கூறி கோவை மாநகர காவல்துறையினரிடம் பெண் அதிகாரி புகாரளித்தார். குற்றம் சாட்டப்பட்ட சக அதிகாரி அமிதேஸ் ஹர்முக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

விமானப்படை அதிகாரிகள் சார்ந்த சட்ட திட்டங்கள் படி விசாரிக்கப்பட வேண்டும் காவல்துறையினருக்கு அதிகாரமில்லை என நீதிமன்றத்தில் முறையிட்டனர். கடந்த 27 ஆம் தேதி விமானப்படை அதிகாரிகளுக்கும் , காவல்துறையினருக்கும் இடையே நீதிமன்றத்தில் அமிதேஷை யார் காவலில் எடுக்க  முடியும் என்ற காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டது. கூடுதல் மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி திலகேஷ்வரி  விமான அதிகாரியின் அமிதேஷ் காவலை 30 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். இன்று யார் காவலில் எடுப்பது என முக்கிய அறிவிப்பை நீதிபதி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-சீனி, போத்தனுர்.

Comments