நோ பீடி .. அடித்த கேடி..!! அடிவாங்கிய பாடி..!!

 

-MMH

       அன்னூர், கீரணத்தம் பகுதியில் பீடி தராத முதியவரை அடித்து உதைத்த பீகார் மாநில இளைஞர் - போலீசார் விசாரணை. கோவை சரவணம்பட்டி அடுத்துள்ள கீரணத்தம் பகுதியில் தனியார் உணவு விடுதியில்  வையாபுரி வயது 86, தீபக் வயது 26 பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஆகிய இருவரும் வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை  வையாபுரி பீடி குடித்துக்கொண்டு  இருந்திருக்கிறார் அப்போது தீபக் வையாபுரி இடம் பீடி கேட்டிருக்கின்றார், வையாபுரி தன்னிடம் பீடி இல்லை என்று சொன்னதினால் கோபமடைந்த தீபக் வையாபுரி யை அடித்து, உதைத்து இருக்கின்றார் இதில் காயமடைந்த வையாபுரி அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்

முதியவர்  வையாபுரி தீபக்கின் மேல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் தீபக்கை விசாரித்து வருகின்றனர். என்னங்க  இது..!!!!  ஒரு பீடிக்கு போய் ஒரு வயசான வர  போட்டு இப்படி அடிச்சு.. எப்பா  இப்படியும்  சிலர் இருக்காங்க.. ஜாக்கிரதையா தாங்க  இருக்கணும் என்ற  புன்னகை கலந்த வருத்தத்துடன் மக்களில் ஒருவனாக..

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி, அன்னூர்  பகுதி.

Comments