சிங்கம்புணரியில் வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பு! லாவகமாகப் பிடித்த தீயணைப்பு வீரர்கள்!

   -MMH

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காவல் நிலையம் எதிரே உள்ள மேற்கு முத்துவடுகநாதர் சுவாமி தெருச் சேர்ந்தவர் காதர்மைதீன். இவர் தனது மனைவியுடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று காலை வீட்டில் வேலைக்கார பெண் மட்டும் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டு காம்பவுண்ட் சுவர் வழியாக நல்லபாம்பு ஒன்று புகுந்ததைப் பார்த்த அவர், அலறியுள்ளார்.

அவரது அலறல்  சத்தம் கேட்ட, பக்கத்து வீட்டை சேர்ந்த லோகேஷ் என்பவர் உடனடியாக அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்குத்  தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த சிங்கம்புணரி தீயணைப்புத்துறையினர், முண்ணனி தீயணைப்பாளர் பிரகாஷ் தலைமையில் விரைந்து வந்து வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்து, மேல்மலைக்குண்டு வனப்பகுதியில் விட்டுவிட்டனர்.

குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடுவது வனத்துறையினரின் பணியென்றாலும், சிங்கம்புணரியில் வனத்துறையினர் இல்லாத காரணத்தால் வேறுவழியின்றி தீயணைப்புத் துறையினர் அந்தப் பணியை பொறுப்புடன் செய்து வருகின்றனர்.

- அப்துல்சலாம், ராயல் ஹமீது.

Comments