இலவச கண் பரிசோதனை முகாம்!!

 -MMH

கோவை சேவா பாரதி மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நாளை 12ம் தேதி இலவச கண் பரிசோதனை, சிகிச்சை முகாம் நடக்கிறது.

ஆர்.எஸ்.புரம், சத்குரு சேவாஸ்ரமத்தில் காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை முகாம் நடக்கிறது. இதில், இலவச சர்க்கரை நோய், கண் விழித்திரை குறைபாடு கண்டறியும் பரிசோதனை, 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு, இலவச கண் கண்ணாடி வழங்கப்படுகிறது. 

மேலும் முன்பதிவுக்கு, 88389 08600, 63803 73956 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் பரிசோதனைக்காக வருபவர்கள் தங்களின் ஆதார் அட்டை நகல் அவசியம் கொண்டு வர வேண்டும் எனவும், சேவா பாரதி மாநில தலைவர் ராமநாதன் தெரிவித்தார்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments