இதுதான் குடியுரிமையா.! ஒருபுறம் சட்டப்பேரவை கூட்டம் எதிர்ப்புறம் குடிமகன் ஆட்டம்..!!

-MMH

  சென்னை தமிழக அரசின் தற்போதைய சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது.  சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் இடத்தின் எதிர்ப்புறத்தில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. கலைவாணர் அரங்கம் தற்காலிக சட்டசபை என்பதினால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் இடம் சுற்றி  தீவிரமாக பாதுகாப்பு போலீசாரால்  கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்  கலைவாணர் அரங்கில் எதிரிலேயே இந்த டாஸ்மார்க் இருப்பது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. அரசுக்கு என்னதான் டாஸ்மாக்கில் வருமானம் வருகிறது என்றாலும் இப்படி இருப்பது சற்று சங்கடத்தை ஏற்படுத்துவதாக  மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு இங்கு செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்  இல்லையெனில்  வேறு இடத்துக்கு ஆவுது  மாற்றி விட  வேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்

நாளைய வரலாறு செய்திகளாக,

-அப்துல் ரஹீம், திருவல்லிக்கேணி.

Comments

Unknown said…
கருத்துக்கள் சரியானதுதான் அரசுக்கு நடவடிக்கை எடுக்குமா?