கோவை மாவட்டத்தில் ஞாயிறு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

     -MMH

கோவை மாவட்டத்தில் ஞாயிறு கட்டுப்பாடுகளில் இருந்து விலகிக்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் கோவையில் 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. எனவே கோவை மாவட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த ஞாயிறு கட்டுப்பாடு நீக்கி கொள்ளப்படுகின்றது. இருப்பினும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள், ஜவுளி மற்றும் நகை கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் முதல் முதல் தவணை தடுப்பூசியாவது செலுத்தி இருக்க வேண்டும்.

அதேபோல வாடிக்கையாளர்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மொத்த விற்பனை மார்க்கெட்டுகளில் சில்லறை விற்பனைக்கு அனுமதி இல்லை. 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்கவும் அனுமதி. மேலும் பொள்ளாச்சி மாட்டு சந்தையை பொருத்தவரை உள்ளூர் வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

-சுரேந்தர்.

Comments