பிஸ்கட் கவரை வாயில் திணித்ததால் குழந்தை பலி!!

    -MMH

கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யானந்தம், மனைவி நந்தினி, 24. இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நந்தினி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால், 1 வயது மகன் துர்கேஷ் உடன், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தாய் நாகலட்சுமி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். குழந்தையை நாகலட்சுமி கவனித்து வந்தார். நேற்று முன்தினம், வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பிய நந்தினி, துர்கேஷ் அசைவின்றி தொட்டிலில் படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் உடல் முழுதும் சிறு, சிறு காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், நந்தினி, நாகலட்சுமியிடம் விசாரித்தனர். இதில், குழந்தையை அடித்த பாட்டி, அழுகையை நிறுத்த பிஸ்கட் கவரை வாயில் திணித்ததால், குழந்தை பலியானது தெரிந்தது. எனவே போலீசார் நாகலட்சுமியை கைது செய்தனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments