விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க கோரி இந்து அமைப்புகள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி!!

  -MMH

   கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க கோரி இந்து அமைப்புகள்  உண்ணாவிரதம் இருக்க முயற்சி.

கொரோனா பரவல் குறைந்திருக்கிறது தற்போதைய சூழலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த காலங்களைப் போல இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரத்தில் விநாயகர் கோவில் முன்பு இந்து மக்கள் புரட்சிப்படை தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அனுமதி மீறி உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என தடுத்ததால் உண்ணாவிரதம் கைவிடப் பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

- சீனி,போத்தனூர்.

Comments