கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா.. வாலிபரை சுற்றி வளைத்த போலீசார்..!!வால்பாறையில் பரபரப்பு..!!!!

  -MMH

    வால்பாறையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

வால்பாறை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் வயது 46. இவர் வால்பாறையில் பிறந்து வளர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் சில வருடங்களாக திருவண்ணாமலையில் குடியேறி வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. 

சம்பவத்தன்று நேற்று வால்பாறை பையர் ஸ்டேஷன் அருகாமையில் சம்பந்தமில்லாமல் சுற்றித்திரிந்து இருக்கிறார். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து  அவரை கூப்பிட்டு விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் மேலும் வலுவாகி  அவரை சோதனை செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் வால்பாறையில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது.

வால்பாறை பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளதாகவும், கல்லூரி மாணவர்களே பெரிதும் இதில் சீரழிந்து வருவதாக மக்கள் தங்கள் வேதனைகளை பதிவு செய்து வருகின்றனர். அரசு இவ்விஷயத்தை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுத்து, பொதுமக்களையும், இளைஞர்களின் வாழ்வையும் பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-மூன்றாம் கண்.

Comments