பாஜக கோவை மாநகர மாவட்ட சிறுபான்மையர் அணிச் செயலாளர் சார்பில் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு !!

   கோவை: மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் செயின்ட் பால் கலை அறிவியல் கல்லூரியின் சேர்மன் டேவிட் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

பாஜக கோவை மாநகர மாவட்ட சிறுபான்மையர் அணிச் செயலாளர் ஜோசப் சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

அம்மனுவில் செயின்ட் பால் கலை அறிவியல் கல்லூரியின் சேர்மன் டேவிட் விநாயகர் சதுர்த்திக்கு எதிராக ஜெப யாத்திரை நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளதாகவும், அவரின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் பல தீயசக்திகள் செயல்படுவதாக தோன்றுவதாகவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மக்களை ஏமாற்றி கிறிஸ்துவ மக்களுக்கும் இந்த மக்களுக்குமிடையே மதக் கலவரத்தை உருவாக்கி நிரந்தரப் பகை உண்டு செய்யும் நோக்கத்தில் டேவிட் முயற்சித்து வருவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவையில் மதக் கலவரத்தை தூண்டி விடுவார் என்பதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில்  கொடுக்கப்பட்டுள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

நாளைய வரலாறு செய்திக்காக,

- சீனி,போத்தனூர்.

Comments