கோவை இ.எஸ். ஐ.மருத்துவமனைக்கு விருது..!!

 

-MMH

      கொரோனா பரவல் தடுப்பு பணியில், சிறப்பாக செயல்பட்டதற்காக, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தபோது, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை பிரத்யேக சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.

கோவை மட்டுமின்றி, சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொரோனா சிகிச்சைக்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி, இ.எஸ்.ஐ., அட்டைதாரர்களும் சிகிச்சை பெறுகின்றனர்.

சிறப்பாக செயல்பட்டதால், மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிக்குமார் கூறுகையில், ''சென்னை இ.எஸ்.ஐ., மற்றும் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக, நேரில் பங்கேற்க முடியாததால், மருத்துவமனைக்கு விருது அனுப்பி வைக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன். I.அனஸ்.

Comments