எஸ்.வி.மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவியுடன் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைப்பு!!

    -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், எஸ்.வி.மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி சீனிவாசன் தலைமையில் அதிமுகவிலிருந்து விலகி 50க்கும் மேற்பட்டவர்களும், 

சிங்கம்புணரி ஒன்றிய அதிமுக இளம்பெண்கள் பாசறை ஒன்றிய துணைச் செயலாளர் பாண்டியம்மாள் நாகராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்களும் என 100க்கும் மேற்பட்டோர் நேற்று ஊரக வளர்ச்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனைச் சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். 

அவர்கள் அனைவரையும், 'திமுக அரசின்  சாதனைகளையும், அரசின் சிறப்பான திட்டங்களையும் மக்களிடத்தில் கொண்டு சேர்த்து கழகப் பணியிலும், மக்கள் பணியிலும் திறம்பட செயலாற்ற வேண்டும்' என வாழ்த்தி அமைச்சர்  வரவேற்றார். 

இந்நிகழ்வில் சிங்கம்புணரி திமுக ஒன்றியச் செயலாளர் பூமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் அம்பலமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர் சிவபுரிசேகர், கதிர்காமம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments