சிங்கம்புணரி அருகே பெண் தற்கொலை!! வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சி ரூ.10000 உதவி!

 -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளிகுன்றம்பட்டி கிராமத்தில் கணவனை இழந்த போதும்பொண்ணு தனது இரண்டு குழந்தைகள், நடக்க இயலாத நிலையில் வயதான மாமனார், சிறிய மாமனார், மனநலம் குன்றிய கொழுந்தனாருடன் வசித்து வந்த போதும்பொண்ணு, வறுமையின் காரணமாக மருத்துவம் பார்க்க வழி இல்லாத நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

(ஏற்கனவே இந்தச் சம்பவம் குறித்து நாளைய வரலாறு இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம் -  https://www.nalaiyavaralaru.page/2021/09/blog-post_95.html?m=1) இதன் காரணமாக ஆதரவின்றி மிகவும் வறுமை நிலையில் தவித்த அந்தக் குடும்பத்தினருக்கு, சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் அயலக பாசறை சார்பாக அயலக பாசறை பொறுப்பாளர் சதக்கத்துல்லா ஏற்பாட்டில் ஆசைச்செல்வன், எஸ்.புதூர் ஒன்றிய பொறுப்பாளர் கிழவயல் வெள்ளைச்சாமி, மாற்றுத்திறனாளி பாசறை பொறுப்பாளர்கள் கனகராஜ், சிகரம்சுபா, பறம்புமலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கர்ணன் ஆகியோர் நேரில் சென்று உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் ரூ.10000 உதவித்தொகை  வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வின்போது ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் அழகன்பூசாரி, கண்ணுச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments