அன்னூர் பகுதிகளில் 100 நாள் வேலை ஒப்பந்த திட்டத்தில் முறைகேடு..!! பணித்தள பொறுப்பாளர் பணி நீக்கம்..!!
அன்னூர் வட்டத்துக்கு உட்பட்ட அ.மேட்டுப்பாளையத்தில் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு. பணித்தள பொறுப்பாளர் பணிநீக்கம்.
கடந்த 2019 -2020 ஆண்டின் 100 நாள் வேலை திட்டத்தின் பணிகள் குறித்த சமூக தணிக்கை அறிக்கை சம்பந்தமாக கிராமசபை கூட்டம் வட்டக் காரன்புதூரில் நடைபெற்றது, இதில் வல அலுவலர் சேகர், வட்டாரவள அலுவலர் சந்திரசேகர், ஊராட்சித் தலைவர் பொன்னுசாமி, துணை வட்டார வள அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விவாதத்தில் 2019 2020 ஆம் ஆண்டுகளில் 100 நாள் வேலை திட்டத்தின் சமூக தணிக்கை அறிக்கை மீதான விவாதத்தில் வேறு இடங்களை சேர்ந்தவர்களுக்கு பணிகள் ஒதுக்குதல், பணி செய்யாதவர்களுக்கு சம்பளம் வழங்கியது, செய்த பணிகளுக்கு வட்டார வள அலுவலரிடம் ஒப்புகை பெறாதது, அளவீடு குறைபாடு போன்றவைகளை பற்றியான சமூக தணிக்கை விவாதம் நடந்தது. மேலும் பூசாரி பாளையத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு 4 கிலோ மீட்டர் அப்பால் பணிகள் வழங்கியதாக கூறி 100 நாள் வேலை திட்டம் பணிக்கான அட்டையை திருப்பிக் வழங்கியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சமூக தணிக்கை அறிக்கையில் விவாதத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடுகளின் அடிப்படையில் பணித்தள பொறுப்பாளர் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட வள அலுவலர் உத்தரவிட்டார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது சாதிக் அலி.
Comments