10 பைசாவுக்கு பிரியாணி! காரைக்குடியில் குவிந்த அசைவப் பிரியர்கள்!

 

   -MMH

    10 பைசாவுக்கு பிரியாணி என அறிவிப்பை கேட்டதும், புதிய அசைவ கடைமுன் குவிந்த கூட்டத்தால் காரைக்குடி நகர் திக்குமுக்காடி போனது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா சிலை அருகே ராவுத்தர் கல்யாண வீட்டு பிரியாணி என்ற புதிய ஹோட்டல் நேற்று தொடங்கப்பட்டது.

துவக்கவிழா சலுகையாக பழைய 10 பைசா நாணயம் கொண்டு வரும் முதல் 200 நபர்களுக்கு 1 பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


இதனையடுத்து நேற்று கடை முன் பிரியாணி பிரியர்கள் குவியத்தொடங்கினர். முதலில் 10 பைசா நாணயம் கொண்டுவந்த 300 பேர்களுக்கு 1 பிரியாணி தால்ச்சா, தயிர் வெங்காயம், பாசிப்பருப்பு பாயாசம் அடங்கிய பார்சல் வழங்கப்பட்டது.

300 பேரை தாண்டி 10 பைசா நாணயம் கொண்டு வந்த பிரியாணி பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த உணவகத்தை காரைக்குடி அழகப்பா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா, காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜி, தொழிலதிபர் படிக்காசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதேபோன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், புதிதாக பிரியாணி கடைகள் திறக்கப்படும் போது கடையை விளம்பரப்படுத்தும் வகையில் இவ்வாறு 10 பைசா பிரியாணி ஆஃபர் வழங்கப்படுவது சமீபகாலமாக வழக்கமாக உள்ளது.

- பாரூக், சிவகங்கை.

Comments