சிங்கம்புணரியில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் 25 கிலோ பறிமுதல்! பேரூராட்சி நடவடிக்கை!

-MMH

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலீதீன் பைகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தது.

இதையடுத்து, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி உத்தரவின்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது தலைமையில் நகர்ப்பகுதிகளில் உள்ள மளிகைக்கடைகள், உணவகங்கள், பூக்கடைகள் மற்றும் டீக்கடைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் போது, கடைகளிலிருந்து 25 கிலோ தடைசெய்யப்பட்ட பாலீதீன் பைகளை பறிமுதல் செய்தனர். நமது செய்தியாளரிடம் பேசிய சிங்கம்புணரி பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜான் முகமது, 'தடை செய்யப்பட்ட பொருள்கள் சம்மந்தமாக சோதனை தொடர்ந்து நடைபெறும்' எனத் தெரிவித்தார். இந்த சோதனையின் போது உணவுப்பொருட்கள் ஆய்வாளர் செந்தில்குமார், நேரு யுவகேந்திரா தன்னார்வலர் சீதாதேவி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments