2 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பட்டதாரி பெண்! கூலித் தொழிலாளியின் மகள் அசத்தல்!

 

-MMH

       கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சி 6 -வது வார்டு தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. ஆதி திராவிட பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த வார்டில், நதியா என்பவர் திறவுகோல் சின்னத்திலும், திலகவதி கட்டில் சின்னதிலும், ரேவதி சீப்புச் சின்னத்திலும் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 451 ஓட்டில் 287 வாக்குகள் பதிவானது. வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெய்சங்கர் முன்னி லையில் தொடங்கியது. 

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்ட 11 அலுவ லர்கள், 3 வேட்பாளர்கள் மற்றும் அவரது ஏஜென்டுகள் மெட்டல் டிடெக் டர் மூலம் சோதனை செய்யப்பட்டு பிறகு வாக்கு எண்ணிக்கை மையத் திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இதையொட்டி அங்கு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சுரேஷ், சசிகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

சுமார் 45 நிமிடம் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் நதியா, திலகவதி ஆகியோருக்கு தலா 110 வாக்குகளும், ரேவதிக்கு 62 வாக்குகளும் கிடைத்தன. செல்லாத வாக்குகள் 5 பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நதியா, திலகவதி ஆகியோர் தலா 110 வாக்குகள் பெற்று இருந்த நிலையில், செல்லாத வாக்குகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் நதியாவிற்கு விழுந்த 2 வாக்குகள் தவறுதலாக செல்லாத வாக்குகள் கணக்கில் சேர்க்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் நதியா வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெய்சங்கர் அதிகாரப்பூர்வமான அறிவித்தார். பின்னர் அதற்கான சான்றிதழையும் வழங்கினார்.

இதற்கிடையே திலகவதியின் ஆதரவாளர்கள்  மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரிடம் வாக்குச் சீட்டுகள் காண்பிக்கப் பட்டது. வெற்றி பெற்ற நதியா (வயது 22), குண்டாடா எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த லட்சுமணன் என்ற கூலித்தொழிலாளியின் மகள் ஆவார். இவர் பி.எஸ்.சி மைக்ரோ பையாலஜி பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-S.ராஜேந்திரன்.

Comments