வாகன சான்றிதழ்களை புதுப்பிக்க அக்டோபர் 31 வரை அவகாசம் !

-MMH

       வாகன ஓட்டுனர் உரிமம் வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க வைரஸ் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல்  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் 31-ஆம் தேதிக்குள் வாகன ஓட்டுனர் உரிமம் வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க வேண்டும் என்றும் 31ம் தேதிக்கு பின் அவகாசம் நீட்டிக்கப்பட்டது என்றும் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் மக்கள் நேரடியாக வருவதை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிப்பது தேவைப்படும் பகுதிகளில் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments